சிறையில் இருந்து செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றம் வரப்போகும் நாமல்! வெளியிடவுள்ள முக்கிய அறிவிப்பு

Parliament of Sri Lanka Mahinda Rajapaksa Namal Rajapaksa Rohitha Abeygunawardana
By Benat Sep 06, 2026 03:14 PM GMT
Report

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ச, எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நாமலின் மனைவி

இந்த நிலையில், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில், அந்த அமர்வில் நாமல் ராஜபக்ச கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, இந்த மாதம் 12ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மக்கள் கூட்டமொன்று அனுராதபுரத்தில் நடைபெறவுள்ளது.


குறித்த கூட்டத்தில் நாமல் ராஜபக்ச சிறப்புரையொன்றை ஆற்றவிருந்ததாகவும், தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளதால் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாத நிலையில், நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு அந்த உரையை ஆற்றவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே, நாமல் ராஜபக்சவுக்குப் பதிலாக அவரது மனைவி லிமினி ராஜபக்ச அனுராதபுர கூட்டத்தில் கலந்துகொள்வார் என வெளியான தகவலை நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன மறுத்துள்ளார்.

அரசியல் பழிவாங்கல்

அது போலியான தகவல் என அவர் குறிப்பிட்டுள்ளதுடன் தான் அமைச்சராக இருந்த கடந்த அரசாங்கத்தின் போது, இது போன்ற நிகழ்வு நடந்திருந்தாலும் நான் அதனையும் அனுமதித்திருக்க மாட்டேன். ஒரு ஜனநாயக நாட்டிற்கு அரசியல் பழிவாங்கல் பொருத்தமானதல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

சிறையில் இருந்து செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றம் வரப்போகும் நாமல்! வெளியிடவுள்ள முக்கிய அறிவிப்பு | Namal Rajapaksa Arrested

மேலும், அனுராதபுர கூட்டத்தில் நாமலுக்குப் பதிலாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்துகொள்ள உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

எனினும், மகிந்த ராஜபக்ச எந்தவித உரையையும் ஆற்றமாட்டார் என்றும், மக்களோடு மக்களாக இணைந்து கூட்டத்தில் கலந்துகொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசர அவசரமாக நாட்டை விட்டு வெளியேறிய முக்கிய அரசியல்வாதி - சிஐடியினருக்கு கசிந்த தகவல்

அவசர அவசரமாக நாட்டை விட்டு வெளியேறிய முக்கிய அரசியல்வாதி - சிஐடியினருக்கு கசிந்த தகவல்

மீண்டும் திரைமறைவில் களமிறங்கும் மகிந்த! தென்னிலங்கை அரசியலில் ஏற்படவுள்ள புதிய திருப்பம்

மீண்டும் திரைமறைவில் களமிறங்கும் மகிந்த! தென்னிலங்கை அரசியலில் ஏற்படவுள்ள புதிய திருப்பம்

 

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US