முல்லைத்தீவில் மர்மமாக செத்து கரையொதுங்கும் லட்சக்கணக்கான மீன்குஞ்சுகள்
முல்லைத்தீவு – மாத்தளன் சிறுகடல் கரைப் பகுதியில் கடந்த சில நாட்களாக லட்சக்கணக்கான சிறிய மீன்குஞ்சுகள் செத்து கரையொதுங்கி வருகின்றமை அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது நிலவும் அதிக வெப்பநிலையின் காரணமாகவே இவ்வாறு மீன்கள் பெருமளவில் உயிரிழந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
லட்சக்கணக்கான மீன்குஞ்சுகள்
மாத்தளன் சிறுகடல் கடற்கரைப் பகுதியில் சிலாப்பி, நெத்தலி, மணலை, சூடை, காரல் உள்ளிட்ட பல்வேறு வகையான சிறிய மீன்குஞ்சுகளே அதிகளவில் இறந்து கரையொதுங்கியுள்ளன.
அத்துடன், கடற்கரைப் பகுதியில் உப்பு உறைந்து படிந்த நிலையில் காணப்படுவதும் அவதானிக்கப்பட்டுள்ளது.

லட்சக்கணக்கான மீன்குஞ்சுகள் கரையோரத்தில் இறந்து கிடப்பதை பார்வையிடுவதற்காக மக்கள் அப்பகுதிக்கு சென்று வருவதுடன் சிலர் கரையொதுங்கிய மீன்குஞ்சுகளை அள்ளிச் செல்வதையும் அவதானிக்க முடிகின்றது.
எனினும், மீன்களின் திடீர் உயிரிழப்புக்கான காரணம் இதுவரை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்க கப்பல் மீது ஈரான் அதிரடி தாக்குதல்! முற்றிலும் பொய்யானது என மறுத்த அமெரிக்கா





