உக்ரைன் தலைநகரில் இரவோடு இரவாக ரஷ்ய படைகள் டிரோன் தாக்குதல்!
உக்ரைன் தலைநகரில் இரவோடு இரவாக ரஷ்ய படைகள் நடத்திய டிரோன் தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளதாக கீவ் நகர மேயர் தெரிவித்துள்ளார்.
நள்ளிரவு நேரத்தில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் காரணமாக வானில் சுமார் 2 மணி நேரத்திற்கு புகை மண்டலம் சூழ்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.

டிரோன் தாக்குதல்
மேலும், கீவ் நகரின் மீது சுமார் 5 முறை குண்டுகள் வீசப்பட்டதாக அங்குள்ள செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

இந்த தாக்குதல் காரணமாக டார்னிட்ஸ்கி, சோலோமியான்ஸ்கி, போடில் உள்ளிட்ட பகுதிகளின் சில இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கீவ் நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அண்மைக்காலமாக உக்ரைனின் பல பகுதிகளில் ரஷ்ய படைகள் தொடர்ச்சியாக இரவு நேரங்களில் டிரோன் தாக்குதல் நடத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
மீண்டும் காமெடி ரூட்டிற்கு திரும்பும் நடிகர் சந்தானம்... இந்த முறை யாருடைய படம் தெரியுமா? Cineulagam