உக்ரைனுக்கு திடீர் விஜயம் செய்த போரிஸ் ஜோன்சன் - இராணுவப் பயிற்சி வழங்குவதாக உறுதி
உக்ரைனுக்கு திடீர் விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன், உக்ரேனிய வீரர்களுக்கு பிரித்தானிய இராணுவப் பயிற்சியை அறிவித்துள்ளார்.
உக்ரைன் தலைநகர் கிய்வ் நகருக்கு இரண்டாவது திடீர் விஜயத்தை மேற்கொண்ட பிரதமர், இங்கிலாந்து ஒவ்வொரு 120 நாட்களுக்கும் 10,000 வீரர்களுக்கு பயிற்சி அளிக்க முடியும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்த பிறகு, உக்ரேனிய மக்களிடம் பேசிய அவர், இறுதியில் நீங்கள் வெற்றிபெறும் வரை பிரித்தானியா உங்களுக்கு ஆதரவாக இருக்கும்' என்று தெரிவித்துள்ளார்.
Mr President, Volodymyr,
— Boris Johnson (@BorisJohnson) June 17, 2022
It is good to be in Kyiv again. pic.twitter.com/wbpMuf6YqY
ஒவ்வொரு மூன்று வாரங்களுக்கும் சுமார் 600 வீரர்கள் தெரிவு
இந்த பயிற்சி உக்ரேனியப் படைகளுக்கு 'தங்கள் வரிசைப்படுத்தலை விரைவுபடுத்தவும், அவர்களின் படைகளை மீண்டும் கட்டமைக்கவும், அவர்களின் எதிர்ப்பை அதிகரிக்கவும்' உதவும் என்று டவுனிங் ஸ்ட்ரீட்டின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் முழுமையான அணு ஆயுதப் போர் அச்சுறுத்தல்களைத் தவிர்ப்பதற்காக இந்தப் பயிற்சிகள் மூன்றாவது நாட்டினால் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில், முன் வரிசைக்கான போரில் வெற்றிபெறும் திறன், அடிப்படை மருத்துவப் பயிற்சி, சைபர்-பாதுகாப்பு மற்றும் வெடிக்கும் தந்திரோபாயங்களை எதிர்கொள்வது' என்ற தீவிரப் பயிற்சிக்காக உக்ரைனில் இருந்து ஒவ்வொரு மூன்று வாரங்களுக்கும் சுமார் 600 வீரர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.
பிரித்தானிய உங்களுடன் எப்போதும் இருக்கும்
எவ்வாறாயினும், புதிய பயிற்சித் திட்டத்தை நடத்த எந்த நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்பதும், உக்ரைன் இந்த திட்டத்தை இன்னும் முறையாக ஏற்கவில்லையா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை.
இந்தப் போரின் ஆழத்தில், உக்ரேனிய மக்களுக்கு தெளிவான மற்றும் எளிமையான செய்தியை வழங்குவதே எனது இன்றைய வருகையாகும் என போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
மேலும் பிரித்தானிய உங்களுடன் எப்போதும் இருக்கும், இறுதியில் நீங்கள் வெற்றிபெறும் வரை நாங்கள் உங்களுடன் இருப்போம் என பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் மேலும் கூறியுள்ளார்.