மூலோபாய ரீதியாக தோற்றுவிட்ட ரஷ்யா! பிரித்தானிய தலைமை இராணுவ அதிகாரி தகவல்
பிரித்தானியா நீண்ட காலத்திற்கு அதிக ஆயுதங்களுடன் உக்ரைனை ஆதரிக்கும் என பிரித்தானிய தலைமை இராணுவ அதிகாரி டோனி ராடகின் அண்மையில் தெரிவித்துள்ளார்.
புடின் தந்திரோபாய வெற்றிகளை அடையலாம்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ரஷ்யா ஏற்கனவே மூலோபாய ரீதியாக தோற்றுவிட்டது. நேட்டோ வலுவாக உள்ளது.
பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நேட்டோவில் சேர விரும்புகின்றன. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அடுத்த சில வாரங்களில் தந்திரோபாய வெற்றிகளை அடையலாம்.
ஆனால் சிறிய ஆதாயங்களுக்காக அவர் தனது நாட்டின் இராணுவ சக்தியில் கால் பகுதியை தியாகம் செய்தார். துருப்புக்கள் மற்றும் உயர் தொழிநுட்ப ஏவுகணைகள் இல்லாமல் போய்விட்டன.
ரஷ்யா ஒவ்வொரு நாளும் குறைந்தது இரண்டு பகுதிகளில் ஐந்து கிலோமீட்டர்கள் முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறது.
படைகளை இழக்கும் ரஷ்யா
ஆனாலும், ரஷ்யாவிற்கு பாதிப்புகள் உள்ளன, ஏனெனில் ரஷ்யா தனது படைகளை இழந்து வருகிறது, உயர் தொழில்நுட்ப ஏவுகணைகள் இல்லாமல் இயங்குகிறது.
ஜனாதிபதி புடின் தனது இராணுவத்தின் சக்தியில் 25 சதவீதத்தை ஒரு சிறிய அளவிலான நிலப்பரப்பைப் பெற பயன்படுத்தினார்.
மேலும், பிரித்தானியா நீண்ட காலத்திற்கு அதிக ஆயுதங்களுடன் உக்ரைனை ஆதரிக்கும் என்று கூறியுள்ளார்.