ஈரானின் புதிய உயர் தலைவர் மொஜ்தபா கமேனிக்கு மாஸ்கோவில் சிகிச்சை! தொடரும் வதந்திகள்..
ஈரானின் புதிய உயர் தலைவரான அயத்துல்லா மொஜ்தபா காமெனெய் மாஸ்கோவில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார் என்ற ஊடகச் செய்தியை ரஷ்யாவிற்கான ஈரான் தூதர் காஸிம் ஜலாலி மறுத்துள்ளார்.
56 வயதான அவர், அமெரிக்கா–இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் கடுமையாக காயமடைந்ததாக முன்பு தகவல்கள் வெளியாகியிருந்தன.
ரஷ்யாவில் மருத்துவ சிகிச்சை
அதனைத் தொடர்ந்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் தனிப்பட்ட அழைப்பின் பேரில் மருத்துவ சிகிச்சைக்காக மாஸ்கோவுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அந்த அறிக்கைகள் தெரிவித்திருந்தன.இந்தநிலையிலே அவர் இந்த செய்தியை அவர் மறுத்துள்ளார்.

ஈரானின் முன்னாள் அதியுச்ச தலைவர் அயதுல்லா அலி காமனெய் தாக்குதலில் பலியானதை தொடர்ந்து அவரின் மகன் மொஜ்தபா காமனெய் அதியுச்ச தலைவராக பதவியேற்றார்.
ஆனால் அவர் இதுவரையில் பொதுவெளியில் தோன்றவில்லை, அதனால் அவர் உயிருடன் இருக்கின்றாரா இல்லையா என்ற கேள்விகள் அதிகரித்தன.
ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவரின் முதல் அறிக்கை வெளியானது. இந்தநிலையில் தற்போதும் அவர் குறித்த வதந்திகள் வெளியாகி வருகின்றன.
ரொனால்டோவுக்கு அதிர்ச்சி கொடுத்த டிஆர் காங்கோ: ஃபிபா உலகக்கிண்ணத்தில் ரசிகர்கள் ஏமாற்றம் News Lankasri
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri