ஈரான் குறித்து இஸ்ரேலின் உத்தியோகபூர்வ அறிவிப்பு - மக்களுக்கு இராணுவத்தின் அவசர அறிவுறுத்தல்
மத்திய கிழக்கில் தொடர்ந்தும் மோதல் நிலைமை நீடித்து வரும் நிலையில் இஸ்ரேலிய இராணுவம் உத்தியோகபூர்வ அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி ஈரான் தனது புதிய கட்ட ஏவுகணைத் தாக்குதல்களை இஸ்ரேல் மீது ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் இருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளதை இஸ்ரேலிய இராணுவம் உறபதிப்படுத்தியுள்ளது.
அவற்றை இடைமறித்து அழிப்பதற்கான வான் பாதுகாப்பு கட்டமைப்புகள் தற்போது செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.
மக்களுக்கு அறிவுறுத்தல்
இதேவேளை பாதுகாப்பு கட்டமைப்புகள் இயங்கி வருகின்றதாக தெரிவித்துள்ள இஸ்ரேலிய இராணுவம், மக்களைப் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், அச்சுறுத்தலுக்கு உள்ளாகக்கூடிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் தொலைபேசிகளுக்கு அவசர எச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
தங்கமயில் கர்ப்பமாக இருப்பதை அறியும் பாண்டியன் குடும்பம்.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புரோமோ Cineulagam
ஹார்முஸ் நீரிணையை வலுக்கட்டாயமாக திறந்தால்... பிணங்கள் குவியலாம்: எச்சரிக்கும் நிபுணர்கள் News Lankasri