மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு படுகொலை வழக்கு

Jaffna Law and Order Court of Appeal of Sri Lanka
By Kajinthan Jul 28, 2026 12:42 PM GMT
Report

மண்டைதீவு படுகொலை  மற்றும் புதைகுழி வழக்கு மீண்டும் எதிர்வரும் செப்ரெம்பர் 22 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று(28.07.2026) ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான் அனீபா ரஜீவ் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் இலங்கைத் தமிழ் இளைஞனுக்கு சிறைத்தண்டனை

அவுஸ்திரேலியாவில் இலங்கைத் தமிழ் இளைஞனுக்கு சிறைத்தண்டனை

குறித்த காணியின் உரித்து

இதன்போது யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் மேலதிக சான்றுகள் சமர்ப்பிக்கப்பட்டது.

குறித்த வழக்கின் வழக்காளிகள் சார்பில் சட்டத்தரணி செபமாலைமுத்து கிருஸ்ரபெலினாவுடன் காணாமல் போனோர் அலுவலகத்தின் சட்டத்தரணி பூர்ணி மரியநாயகம், அதன் பிராந்திய இணைப்பாளர் த.செல்வக்குமார், வேலணை பிரதேச சபையின் உறுப்பினரும் தீவக முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான சுவாமிநாதன் பிரகலாதன் மற்றும் பிரதேச சபையின் உறுப்பினர் அனுஷிய ஜெயகாந்த் ஆகியோர் இன்று குறித்த வழக்கு சார்பில் நீதிமன்றில் முன்னிலையாகி இருந்தனர்.

மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு படுகொலை வழக்கு | Mandaithivu Murder Case Adjourned To September 22

முற்பகல் 10 மணிக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட குறித்த வழக்கு வாதப் பிரதிவாதங்களின் பின் பிற்பகல் 2.30 மணிவரை ஒத்திவைக்கபட்டது.

பிற்பகல் 2.30 மணிக்கு மீண்டும் விசாரணைக்காக எடுக்கப்பட்ட குறித்த வழக்கின் போது வழக்காளிகளின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளால் குறித்த விடயம் தொடர்பில் அடையாளப்படுத்தப்பட்ட இடத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அடையாளப்படுத்தப்பட்ட குறித்த காணியின் உரித்து யாருடையது என்பதை உறுதி செய்து அறிக்கை பெற்றுக் கொள்ளவேண்டும் என்று கிராம சேவகர், பிரதேச செயலர், பிரதேசத்தின் தவிசாளர், வழக்கின் சார்பானவர்கள் , சட்ட விசாரணை அதிகாதி, பொலிசார், பிரதேச முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடல் நடத்த ஆவன செய்யுமாறு நீதிமன்றில் கோரிக்கை முன்வைத்தனர். 

நீதிமன்றத்தில் விசாரணை

அத்துடன் சட்டவிசாரணை அதிகாரியின் அறிக்கை கிடைத்ததும் அகழ்வுக்கான நிதிதிரட்டலுக்கு துறைசார் அமைச்சிடம் கோரிக்கை விடுத்து நிதி பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்படும் என்றும் சுட்டிக்காடியிருந்தனர்.

மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு படுகொலை வழக்கு | Mandaithivu Murder Case Adjourned To September 22

முன்வைக்கப்பட்ட வியாக்கியானங்களை அடுத்து குறித்த வழக்கு வரும் செப்ரெம்பர் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

முன்பதாக கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 04 ஆம் திகதியன்று குறித்த சம்பவத்தில் தனது மகனை பறிகொடுத்த 81 வயதுடைய ஸ்ரிபன் மரில்டா என்பவர் மற்றும் வேலணை பிரதேச சபையின் உறுப்பினரும் தீவக முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான சுவாமிநாதன் பிரகலாதன் ஆகியோரால் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு கடந்த 17.09.2025 அன்று ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மாணவர்களுக்கு வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் கற்க வாய்ப்பு

இலங்கை மாணவர்களுக்கு வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் கற்க வாய்ப்பு

ஹொரணை பகுதியில் பாரியளவிலான இரத்தினக்கல் கடத்தல் முறியடிப்பு

ஹொரணை பகுதியில் பாரியளவிலான இரத்தினக்கல் கடத்தல் முறியடிப்பு

மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US