அரசாங்கத்துக்கு எதிரான பரந்துபட்ட கூட்டணி! ரணில் முயற்சி
ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிராக பரந்துபட்ட கூட்டணியொன்றை ஏற்படுத்தும் கலந்துரையாடல்களை முன்னெடுக்க ரணில் விக்ரமசிங்க உத்தேசித்துள்ளார்.
இலங்கையின் நீண்டகால சவால்களுக்குத் தீர்வுகாண்பதற்கான உத்தேச தேசிய கொள்கைக் கட்டமைப்பு தொடர்பாக, பெலவத்தையைத் தளமாகக் கொண்ட தேசிய மக்கள் சக்தியைத் தவிர்ந்த ஏனைய அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடல்களை முன்னெடுக்க ஐக்கிய தேசியக் கட்சி தயாராகி வருவதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
பிரதான நோக்கம்
கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார எதிர்காலம் குறித்த கலந்துரையாடல்களை இலகுபடுத்தும் நோக்கில் விசேட கலந்துரையாடல் ஆவணமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

குறித்த ஆவணம் ஐக்கிய தேசியக் கட்சிக்காக மாத்திரம் தயாரிக்கப்படவில்லை எனவும், பெலவத்தையைத் தவிர ஏனைய அனைத்துக் கட்சிகளுடனும் தாம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பொதுவான தேசிய வேலைத்திட்டமொன்றின் ஊடாக அரசியல் கட்சிகளிடையே சாத்தியமான பரந்த இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதே இதன் பிரதான நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை, முதலீடுகளை ஊக்குவித்தல், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துதல் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு, அடுத்த 20 ஆண்டுகளுக்கு முன்னெடுக்கக்கூடிய கொள்கைக் கட்டமைப்பொன்றை உருவாக்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யோசனையொன்றை முன்வைத்துள்ளார்.
மாந்தோட்டத்திற்குள் சிக்கிய ஆடம்பர மாளிகை - விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் - அடுத்தடுத்து பல வீடுகள்