சுரேஷ் சலே தொடர்பில் நீதிமன்றின் இன்றைய உத்தரவு
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் தாக்கல் செய்த ரிட் மனு ஆகஸ்ட் 25ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் நடத்தப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில், சுரேஷ் சலே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
மனு விசாரணைக்கு
இந்த நிலையில், பயங்கரவாத் தடைச் சட்டத்தின் கீழ் தாம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமையை எதிர்த்து சுரேஷ் ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

குறித்த மனு இன்ற மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னிலையில் பரிசீலணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 25ஆம் திகதி மனுவினை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மன்று தீர்மானித்துள்ளது.
அன்றையதினத்தில், குறித்த மனு தொடர்பான மேலதிக விபரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கபடவுள்ளன.
you may like this video