பிரித்தானியர்களுக்கு சுவிஸில் கிடைக்கவுள்ள வாய்ப்பு!
பிரித்தானியா (UK) மற்றும் சுவிட்ஸர்லாந்துக்கு (Switzerland) இடையே புதிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், பிரித்தானியாவில் தகுதிபெற்ற தொழில்முறையாளர்களுக்கு சுவிட்சர்லாந்தில் வேலை செய்ய அனுமதி வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, 200இற்கும் மேற்பட்ட தொழில்முறைகளில் வேலை செய்யக்கூடியவாறு பிரித்தானிய பிரஜைகளின் தகுதிகளை சுவிட்சர்லாந்து அங்கீகரிக்கும் என கூறியுள்ளது.
புதிய ஒப்பந்தம்
இவ்வொப்பந்தத்தினால், வழக்கறிஞர்கள், பனிச்சறுக்கு பயிற்சியாளர்கள், ஆனஸ்தீசியா நிபுணர்கள் மற்றும் வாகன பயிற்றுவிப்பாளர்கள் போன்ற பல்வேறு துறைகளின் தொழில்முறையாளர்கள் பயன்பெறுவர்.
கடந்த 2018ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட Citizens’ Rights Agreement இற்கு மாற்றாக இந்த புதிய ஒப்பந்தம் கொண்டுவரப்படுகிறது.
Citizens’ Rights Agreement ஒப்பந்தத்தின் போது பிரித்தானியா மற்றும் சுவிட்ஸர்லாந்து குடியிருப்பாளர்கள் இடையே தொழில்முறை அனுமதிகள் வழங்கப்பட்டன. அந்த ஒப்பந்தம் கடந்த ஆண்டின் இறுதியில் காலாவதியானது.
உலக சந்தையில் எதிர்மறை நிலைமைகள் அதிகரிக்கும் நிலையில், இந்த ஒப்பந்தம் இரு நாடுகளினதும் வணிக வளர்ச்சிக்கு ஒரு முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
அதேநேரத்தில், இந்த புதிய ஒப்பந்தம், உலகளாவிய பொருளாதாரங்களில் சுமுகமான வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
[Q0M9C2N
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |