மேன்முறையீட்டு நீதிமன்றம் மைத்திரிபால சிறிசேனவுக்கு பிறப்பித்த உத்தரவு!
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த 2022 ஆம் ஆண்டு உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (03.01.2026) இரத்துச் செய்து ரிட் உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் பிறப்பித்த மனுவே இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
ஐந்து பேர் கொண்ட அமர்வு பிறப்பித்த உத்தரவு
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரித்த, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் ஐந்து பேர் கொண்ட அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இருப்பினும், புதிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டால், கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள தனிப்பட்ட முறைப்பாடு தொடர்வதை இந்தத் தீர்ப்பு தடுக்காது என்றும் அமர்வு குறிப்பிட்டுள்ளது.
ஈரானால் லண்டனுக்கும் அச்சுறுத்தல்... ஏவுகணைகளைத் தடுக்கும் பாதுகாப்பு அமைப்பு இல்லாத பிரித்தானியா News Lankasri
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri