மன்னாரில் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது: பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு நடவடிக்கை (Photos)

Sri Lanka Police Mannar Crime
By Ashik Sep 06, 2023 09:00 AM GMT
Report

மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் ஹோட்டல் ஒன்றின் குளியல் அறைகளில் இருந்து திருடப்பட்ட ஒரு தொகுதி குளியல் அறை உபகரணங்களுடன்  சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் நேற்று (05.09.2023) செவ்வாய்க்கிழமை மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பின் புறநகரில் கொள்ளையடிக்க சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

கொழும்பின் புறநகரில் கொள்ளையடிக்க சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

அவர்களிடமிருந்து சுமார் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான குளியல் அறை உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் - தாழ்வுபாடு மற்றும் புத்தளம் பகுதிகளைச் சேர்ந்த 23 மற்றும் 58 வயதுடையவர்கள் என மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

குளியல் அறை உபகரணங்கள் 

மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் ஹோட்டல் ஒன்றின் குளியல் அறைகளில் இருந்து சுமார் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான குளியல் அறை உபகரணங்கள் திருடப்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர் திங்கட்கிழமை (04.09.2023) மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தனர்.

மன்னாரில் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது: பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு நடவடிக்கை (Photos) | Two Arrested In Connection With Robbery In Mannar

குறித்த முறைப்பாட்டிற்கு அமைவாக மன்னார் தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும், பிரதான பொலிஸ் பரிசோதகருமான சந்தன பிரசாத் ஜெயதிலக்க  பணிப்புரைக்கு அமைவாக உப பொலிஸ் பரிசோதகர் நிப்பூன் தலைமையில் மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவை சேர்ந்த பொலிஸ் சாஜன் களான சிவ ராஜா (53207), முசாதிக்(62792), பொலிஸ் கொஸ்தபில்களான லியனகே(105297), ஹேரத் (105276), கருணாரத்ன (105221) ஆகியோர் இணைந்து மேற்கொண்ட துரித நடவடிக்கைகளுக்கு அமைவாக நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (5) குறித்த இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதோடு அவர்கள் பதுக்கி வைத்திருந்த சுமார் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளது.

மன்னாரில் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது: பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு நடவடிக்கை (Photos) | Two Arrested In Connection With Robbery In Mannar

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள் இருவரும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

தமிழர் பகுதியில் அமைக்கப்படும் கட்டடங்களின் பரிதாப நிலை! வெளிவரும் அதிர்ச்சிப் பின்னணி

தமிழர் பகுதியில் அமைக்கப்படும் கட்டடங்களின் பரிதாப நிலை! வெளிவரும் அதிர்ச்சிப் பின்னணி

விசாரணைகளின் பின் குறித்த இரு சந்தேக நபர்களும் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாக மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.  மன்னார் மாவட்டத்தில் அண்மைக்காலமாக இவ்வாறான பல்வேறு திருட்டு சம்பவங்கள் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முல்லைத்தீவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர்கள் இருவர் பலி

முல்லைத்தீவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர்கள் இருவர் பலி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US