முல்லைத்தீவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர்கள் இருவர் பலி
முல்லைத்தீவு - மாங்குளம் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
குறித்த இளைஞர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்துடன் மோதியதில் விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
இச்சம்பவத்தில் முல்லைத்தீவு நோக்கி பயணித்த முள்ளியாவெளியைச் சேர்ந்த 23 மற்றும் 24 வயதுடைய இளைஞர்கள் இருவரே உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் படுகாயங்களுக்குள்ளான மோட்டார் சைக்கிளின் ஓட்டுனர் மற்றும் பின்னால் அமர்ந்து சென்றவர் ஆகியோர் ஒட்டுசுட்டான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழில் எட்டு வயது சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம்: முன்னாள் திடீர் மரண விசாரணை அதிகாரி குற்றச்சாட்டு
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
14 ஆண்டு சோகத்திற்கு முடிவு - எந்த ஐபிஎல் அணியும் செய்யாத சாதனையை படைத்த மும்பை இந்தியன்ஸ் News Lankasri
கொடூர வில்லனாக என்ட்ரி கொடுக்கும் ராவணன் ஆதிமுத்து, யாரு பாருங்க... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
அசையா சொத்து மட்டும் ரூ.404 கோடி.. நடிகர் விஜய் வேட்பு மனுவில் குறிப்பிட்ட முழு சொத்து விவரம் Cineulagam