நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் : காயமடைந்த அதிகாரிகளை நேரில் சந்தித்த அமைச்சர் ஹர்ஷன
நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறையில் காயமடைந்து, நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வரும் சிறைச்சாலை அதிகாரிகளை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நேரில் சந்தித்துள்ளார்.
வைத்தியசாலைக்குச் சென்ற அமைச்சர், காயமடைந்த அதிகாரிகளுக்கு வழங்கப்படும் மருத்துவச் சிகிச்சைகள் மற்றும் அவசரத் தேவைகள் குறித்து அங்குள்ள வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலைப் பணிப்பாளர்களுடன் விரிவாகக் கலந்துரையாடியுள்ளார்.

நீர்கொழும்பு சிறையில் நிகழ்ந்த மோதலில் காயமடைந்த 23 சிறை அதிகாரிகள் நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற அதே நேரத்தில் 54 கைதிகள் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு முன்பாக கூச்சலிடும் கைதிகளின் உறவினர்கள்! குவிக்கப்பட்டுள்ள கலகமடக்கும் பொலிஸார்
நீர்கொழும்பு சிறையில் அடுத்தடுத்து ஏற்பட்ட பெரும் பதற்றம் - அவசர விசாரணைக்காக விரையும் முக்கிய அதிகாரிகள்
