தமிழருக்கு சொந்தமான பாரிய பீச் ஹோட்டல் எரியூட்டப்பட்ட கொடூரம்! மைக்கேல் ராபர்ட்ஸ் என்பவரால் வெளியிட்டுள்ள தகவல்கள்
கொழும்பில் இன்றும் பலர் அறியாத வகையில் இனவாத தீயின் கோரத்தாண்டவத்தை பறைசாற்றும் வகையில் கல்கிஸ்சையில் ஒரு ஹோட்டல் மௌனமாக சாட்சி பகர்வதாக 2016 ஆம் ஆண்டில் அஜய் கமலேந்திரன் (Ajay Kamalendran) என்பவரால் இந்திய இணையத்தளம் ஒன்றிற்கு எழுதப்பட்ட கட்டுரை ஒன்றைக் மேற்கோள் காட்டி மைக்கேல் ராபர்ட்ஸ் (Michael Roberts) தனது இணையத்தளத்தில் மீண்டும் வெளியிட்ட அக்கட்டுரையில் தமிழருக்கு சொந்தமான பாரிய பீச் ஹோட்டல் எரியூட்டப்பட்ட கொடூரத்தை விபரித்துள்ளார்.
சிறைச்சாலைக்குள் நடைபெற்ற மனிதாபிமானமற்ற கொடூரம்! காணாமல் போன இரு T-56 துப்பாக்கிகள்: வெளிவந்திருக்கும் உண்மைக் கதை...
தமிழ் வர்த்தக குடும்பத்திற்கு என்ன நடந்தது
எரியூட்டப்பட்ட கல்கிஸ்சை 'டிலீஸ் பீச்' ஹோட்டல் (Tilleys Beach Hotel) அக்காலத்தில் வாழ்ந்த ஒரு இலங்கைத் தமிழ் வர்த்தக குடும்பத்திற்குச் சொந்தமானதாகும்.
ஆனால் இதன் உரிமையாளர் யார் என்பது குறித்து எழுதப்பட்ட வரலாற்றில் பெயர் எதுவும் குறிப்பிடப்படவில்லை. அப்பகுதியில் வாழ்ந்த பழைய குடியிருப்பாளர்களின் நினைவின்படி இது தில்லைநாதனுக்கு சொந்தமான ஹோட்டல் என்கின்றனர்.
1960களின் பிற்பகுதியில் அல்லது 1970களின் முற்பகுதியில் கட்டப்பட்டதாகும். இந்தத் துயரத்திற்குப் பிறகு அவர் தனது குடும்பத்தினருடன் முதலில் இந்தியாவிற்கும் பின்னர் கனடாவிற்கும் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருவதாகக் மற்றொரு தரப்பினர் கூறுகின்றனர்.

குறித்த ஹோட்டல் கொழும்புக்கு மிக அருகிலுள்ள சுற்றுலா வலயமான கல்கிஸ்சை கடற்கரை பகுதியில் ரயில் பாதைக்கும் கடற்கரைக்கும் மிக அருகிலும் கல்கிஸ்சை ஹோட்டலுக்கு (mount lavinia hotel) அருகாமையிலும் கட்டப்பட்ட இந்தக் கட்டடம் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுலாப் பயணிகளால் நிறைந்திருந்த நாட்டின் ஒரு சொகுசு சுற்றுலா ஹோட்டலாகக் கருதப்படுகிறது.
1983 கறுப்பு ஜூலையின் போது கொழும்பிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் தமிழ் மக்களுக்குச் சொந்தமான ஏராளமான வீடுகளும் வணிக நிறுவனங்களும் தீக்கிரையாக்கப்பட்டன அதில் டிலீஸ் பீச் ஹோட்டலும் 1983 ஜூலை 25 அல்லது அதற்கு அண்மிய ஒரு நாளில் தீக்கிரையாக்கப்பட்டதாக பெரும்பாலான வரலாற்று ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன.
வன்முறையின் கண்ணாடி
இது இலங்கையின் கடந்த கால ஒற்றுமையின்மை மற்றும் இனவாத வன்முறையின் கண்ணாடியாக இன்றும் சாட்சியமளிக்கிறது. தீய்ச்சுவாலையில் கறுத்த சுவர்கள் உடைந்த ஜன்னல்கள் மற்றும் காடு வளர்ந்து மூடப்பட்ட கான்கிரீட் தொகுதிகளைக் கொண்ட சுவர்கள் 43 ஆண்டுகளுக்கும் மேலாகியும் அதன் எலும்புக்கூடாக இன்றும் எஞ்சியிருக்கின்றது.
கறுப்பு ஜூலை கலவரம் தெஹிவளை மற்றும் கல்கிஸ்சை வரை மிக வேகமாகப் பரவியதாகவும் இக்கட்டிடம் காடையர் கும்பல்களின் முக்கிய இலக்காக இருந்ததாக அக்காலத்தில் கல்கிஸ்சை பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராகக் கடமையாற்றிய டபிள்யூ. சமரவிக்ரம தனது பொலிஸ் அணியை காடையர்களுக்கு எதிராகப் பயன்படுத்திய போதிலும் பல்வேறு ஆதரவுகளைப் பெற்றிருந்த காடையர் கும்பல்களின் முன்னிலையில் பொலிஸ் அதிகாரமும் ஆதரவற்றதாகப் போனதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

நான்கு தசாப்தங்களாக பாழடைந்த இடிபாடுகளுக்கு மத்தியில் எஞ்சியிருக்கும் இவ்விடத்தைச் சுற்றி காலப்போக்கில் உருவான பல்வேறு வதந்திகளும் சாதாரணமானவை அல்ல.
இடிபாடுகளுக்குள் இருந்து கேட்கும் தெளிவற்ற சத்தங்கள் மற்றும் விசித்திரமான ஒலிகள் குறித்து அப்பகுதி மக்களிடையே இன்னும் தீர்க்கப்படாத அச்சம் கலந்த பேச்சுகள் உள்ளன. மேலும் பல்வேறு குற்றங்கள் நடந்த ஒரு இருண்ட இடமாகவும் கிராம மக்கள் இவ்விடத்தைக் குறிப்பிடுகின்றனர்.