நீர்கொழும்பு பெண் கைதிகள் மீண்டும் கூரையின் மீது போராட்டம்
நீர்கொழும்பு சிறையில் இடம்பெற்ற மோதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் சிறையின் பெண்கள் பிரிவைச் சேர்ந்த கைதிகள் குழு ஒன்று இன்றும் (06) சிறைச்சாலைக் கூரையின் மீது ஏறிப் போராட்டத்தில் ஈடுபட்டது.
குறித்த போராட்டம் இன்று மாலை வரை முன்னெடுக்கப்பட்ட நிலையில் சிறைச்சாலை அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண் கைதிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தனர்.
பெண் கைதிகள்
அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட கைதிகள், சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் துப்பாக்கிச் சூட்டில் சுமார் 20 ஆண் கைதிகள் கொல்லப்பட்டதாகக் குற்றம் சாட்டினர்.

சிறையில் நிலவும் சூழ்நிலை காரணமாக, தங்கள் குழந்தைகளுக்குத் தேவையான பால் பவுடரும் உணவும் கிடைக்கவில்லை என்றும், அதிகாரிகள் இதற்கு உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
மேலும், நிலவும் பாதுகாப்பின்மையைக் கருத்தில் கொண்டு, தங்களை பிணையில் விடுவிக்க வேண்டும் என்றும், தஙகள் வழக்குகளை விரைவுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் பெண் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழர் விட்டுக்கொடுப்பு அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் 8 மணி நேரம் முன்
விரைவில் திருமணம் செய்யப்போகும் அனிருத் - காவ்யா மாறனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Cineulagam