அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விஜயதாச ராஜபக்ச - ரணில் சந்திப்பு
முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகன், லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக் குழுவாள் (CIABOC) அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த வாரம் விஜயதாசவின் இல்லத்திற்கு நேரில் சென்றுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது மகன் கைது செய்யப்பட்ட அதிர்ச்சியில் இருந்த விஜயதாச ராஜபக்சேவை சந்தித்த ரணில் விக்கிரமசிங்க, அவருக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
மேலும், விஜயதாச மீதான குற்றச்சாட்டுகளை ரணில் விக்கிரமசிங்க முற்றாக நிராகரித்துள்ளார்.
பாதாள உலக கும்பல் தலைவன் ' ஹரக் கட்டா' முறையற்ற விதத்தில் பாதுகாக்கப்பட்டதாக எழுந்த முறைபாடுகளுக்கு பதில் அளித்த ரணில், " அவரது கைது மற்றும் தடுப்புக்காவல் தொடர்பான அனைத்து சட்ட நடைமுறைகளும் சரியாகவே பின்பற்றப்பட்டன.
அப்போதைய பாதுகாப்பு அமைச்சராக எனது ஒப்புதலுடன்தான் அனைத்து ஆவணங்களும் கையெழுத்தாகின.இதில் தனிப்பட்ட நபர்கள் யாரும் தலையிட முடியாது" எனத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட ஒரு நபரைக் காவலில் வைப்பதும், அவரது மனித உரிமைகளை பாதுகாப்பதும் அரசாங்கத்தின் கடமை என்றும், இதில் முறையற்ற தலையீடு எதுவும் இல்லை என்றும் ரணில் அங்கு கூடி இருந்தவர்களிடம் விளக்கம் அளித்துள்ளார்.
ரணிலின் திடீர் வருகை இப்போது இலங்கையில் பெரும் பேசும் பொருளாக மாறி உள்ளது..
இந்தவிடயங்கள் மற்றும் நாட்டில் நடந்த முக்கிய விடயங்களை எடுத்துவருகின்றது கீழ்வரும் காணொளி..
தமிழர் விட்டுக்கொடுப்பு அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் 9 மணி நேரம் முன்
ஜனநாயகன் திரைப்படத்தில் இத்தனை காட்சிகள் நீக்கப்படுகிறதா? வெளிவந்த தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி Cineulagam