இராணுவ முகாமில் துப்பாக்கி திருடிய இருவர் கைது!
ஹோமாகம, பனாகொட இராணுவ முகாமில் துப்பாக்கி திருடிய குற்றச்சாட்டில் இரண்டு இராணுவத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் பனாகொடை இராணுவ முகாமின் பிடிபன பிரதேச காவலரனில் இருந்து சிப்பாய் ஒருவரின் டீ-56 ரக துப்பாக்கி மற்றும் அதற்கான 120 தோட்டாக்கள் என்பனவும் திருடப்பட்டிருந்தது.
இருவர் கைது

இந்நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்திருந்த பொலிஸ் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் மனிதப் படுகொலைகள் தொடர்பான விசாரணைப் பிரிவினர் காணாமல் போன துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை ஹோமாகம பிரதேசத்தில் வைத்துக் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தற்போதைக்கு முகாமில் கடமையாற்றும் சார்ஜண்ட் தர சிப்பாய் ஒருவரும் துப்பாக்கியுடன் தப்பிச் சென்று முன்னாள் சிப்பாயும் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri
இந்த மூன்று பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானிய வானிலை ஆராய்ச்சி மையம் வலியுறுத்தல் News Lankasri
இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam