பனாகொட இராணுவ முகாமில் துப்பாக்கி திருட்டு:விசாரணைகள் ஆரம்பம்
பனாகொட இராணுவ முகாமில் இருந்து ரி-65 துப்பாக்கியை திருடியதாக கூறப்படும் இராணுவ சிப்பாய் ஒருவரைக் கண்டுபிடிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
மூன்று மெகசீன்கள் மற்றும் 90 தோட்டாக்கள் அடங்கிய துப்பாக்கியை குறித்த சிப்பாய் திருடிச் சென்றுள்ளார்.
இராணுவ சிப்பாய்க்கு உதவிய பிரதம குரு
மேலும் அவர் துப்பாக்கியுடன் கொடகம பிரதேசத்தில் உள்ள பௌத்த
விஹாரைக்கு சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதேவேளை அங்கு தமக்கு நெருங்கிய நட்பைக்கொண்ட விகாரையின் பிரதம குருவிடம் தனது துப்பாக்கியை எடுத்துச் செல்லக்கூடிய ஒரு பையொன்றை அவர் கேட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இராணுவ சிப்பாய்க்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் விகாரையின் பிரதம குரு கைது செய்யப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
