கரூர் சம்பவம் தொடர்பில் விஜயின் அடுத்த நகர்வு
தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டத்தில் இடம்பெற்ற துயர சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரிவிட கோரி அக்கட்சி சார்பில் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தவெக தலைவர் விஜயின் கரூர் பரப்புரையில் கூட்ட நெரிசல் காரணமாக 39 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவ்விடயம் இந்திய அரசியல் பரப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பல்வேறு தரப்புக்களால் தவெக கட்சியின் தலைவர் விஜய் மீது குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றது.
மனுத்தாக்கல்
அதேநேரம், தமிழக வெற்றிக் கழகம், குறித்த பரப்புரை கூட்டத்திற்கு போதுமான அளவில் இடப்பரப்பு உள்ள இடம் வழங்கப்படவில்லை என குற்றம் சுமத்தியுள்ளது.
மேலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் வழங்கப்படவில்லை எனவும் பரப்புரையின் இடையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே குறித்த சம்பவம் தொடர்பில் சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு அதிகாரிகளால் விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என தவெக கோரியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



