விஜய் பேசும் போதே சரிந்து விழும் மக்கள்...! வெளியான அதிர்ச்சி காணொளி
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், கரூரில் வான் மீது ஏறி உரையாற்றிக்கொண்டிருக்கும் போதே கீழே மக்கள் சரிந்து விழுவது போன்ற காணொளி வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய், நேற்று(27.09.2025) முன்னெடுத்த தேர்தல் பிரசார கூட்டமொன்றில் நெரிசல் காரணமாக 39 பேர் வரை உயிரிழந்ததோடு பலர் காயமடைந்தனர்.
காயமடைந்த பலரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
இந்நிலையில், இந்த விவகாரம், சமூக ஊடகங்களில் மாறுபட்ட விவாதங்களை உருவாக்கியுள்ளது.
People started collapsing even while TVK Chief Vijay was speaking. If you had seen the event yesterday, Vijay did give water bottles to people seeing them fainting when he started his speech.
— Arvind Gunasekar (@arvindgunasekar) September 28, 2025
If I am not wrong, Vijay while speaking also noted that the ambulances have TVK flags… https://t.co/hw5voyOQqX pic.twitter.com/MKQ08CSe7J
ஒரு தரப்பினர் விஜயை குற்றஞ்சாட்டும் அதேவேளை மற்றுமொரு தரப்பினர் ஆளும் கட்சி சரியான பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்கவில்லை என கூறுகின்றனர்.
இவ்வாறிருக்க, பிரதமர் மோடி உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும் இறந்தவர்களுக்கு தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



