ஒருவருக்கு ஒருவரை தள்ளிக்கொண்ட மக்கள்.. கரூர் சம்பவத்தின் முன் நடந்த பேரதிர்ச்சியான விடயங்கள்!
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பிரசாரத்தில் கலந்துகொள்ள முன்னரே அவரது கட்சி தொண்டர்கள் அங்கு உரையாற்றியுள்ளனர்.
அப்போதே ஒலிவாங்கிகள் சரியாக வேலை செய்யவில்லை என கூட்டத்தில் கலந்துகொண்ட பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் முறையாக செய்யப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது ஆளும் திமுக கட்சியின் சூழ்ச்சியாக இருக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
கூட்ட நெரிசல்
இதேவேளை, அரசாங்கம் சரியான இடத்தை ஒதுக்கி தராததாலேயே இந்த துயர சம்பவம் நடந்ததாக மற்றுமொரு தொண்டர் தெரிவித்துள்ளார்.
அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் மக்கள் தங்களது உயிரை காப்பாற்றிக்கொள்ள ஒருவருக்கொருவரை தள்ளியுள்ளனர்.
இதனாலாயே பலர் பலியானதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், மின்விளக்குகளும் அணைந்து அணைந்து வேலை செய்ததாக மற்றுமொருவர் கூறியுள்ளார்.
இது தொடர்பான மக்களின் கருத்துக்களை காணொளியாக காண இங்கே அழுத்தவும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



