விஜயின் தேர்தல் பிரசார கூட்டத்தில் பதற்றம்! பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு
புதிய இணைப்பு
தமிழக வெற்றிக் கழக பிரசார கூட்டத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் 12 பேர் ஆண்கள், 16 பேர் பெண்கள் மற்றும் 10 குழந்தைகள் என மொத்தம் 38 பேர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
முதலாம் இணைப்பு
தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகருமான ஜோசப் விஜய் இன்று முன்னெடுத்த தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் நெரிசல் காரணமாக பலர் உயிரிழந்துள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கரூரில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தின் போது நெரிசல் காரணமாக 30 பேர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையை மேற்கொள் காட்டி இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இதில் 6 குழந்தைகள் மற்றும் 16 பெண்களும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என அச்சம்
மேலும் நூற்றுக்கும் மேற்பட்டடோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் தீவிர சிசிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த அனர்த்தம் காரணமாக உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை. கரூர் அனர்த்தம் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவலை தெரிவித்துள்ளார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மக்ளுக்கு போதுமான சிகிச்சை வழங்குமாறு துறைசார் அமைச்சருக்கு உடன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
You My Like This Video





தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

ரோபோ ஷங்கர் மறைவு மேடையில் எமோஷ்னலாக பேசிய அவரது மனைவி மற்றும் மகள்.. கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
