கரூர் வைத்தியசாலைக்கு விரைந்த உதயநிதி ஸ்டாலின்
கரூர் பிரசாரக் கூட்டத்தில் சிக்கி காயமடைந்தோரை காண தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கரூர் வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.
குறித்த வைத்தியசாலைக்கு அவர் இன்று(28.09.2025) காலை சென்றிருப்பதாகத் தெரியவந்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் நேற்று(27.09.2025) முன்னெடுத்த தேர்தல் பிரசார கூட்டமொன்றில் நெரிசல் காரணமாக 39 பேர் வரை உயிரிழந்ததோடு பலர் காயமடைந்தனர்.
சிகிச்சை
காயமடைந்த பலரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
TN Deputy CM Udhayanidhi Stalin visits Karur hospital, takes stock of the situation.#TamilNadu #Karur #UdhayanidhiStalin #Vijay #Stampede | @Akshita_N pic.twitter.com/NqSc9WO7yp
— IndiaToday (@IndiaToday) September 28, 2025
இந்நிலையிலேயே, காயமடைந்தவர்களை பார்ப்பதற்காக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கரூர் வைத்தியசாலைக்கு விஜயம் செய்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



