அரசாங்கத்தின் தீர்மானத்தை கடுமையாக விமர்சனம் செய்யும் ஆசிரியர்கள்
அரசாங்கத்தின் தீர்மானத்தை களுத்துறை மாவட்ட ஆசிரியர் சங்கமொன்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்டுள்ள சட்டம் ஆசிரியர்களுக்கு கடுமையான நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
புதிய சட்டத்தின் ஆசிரியர் மாணவர்களை கண்டித்தால் ஆறு மாத சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும் என களுத்துறை மாவட்ட ஆசிரியர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இந்த சட்டத்திற்கு கைகளை உயர்த்தி ஆதரவு வழங்கிய திருட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாடசாலைகளில் மாணவர்களின் ஒழுக்கத்தை பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளது.
சட்ட ரீதியாக தடை விதிக்கப்பட்ட நிலையில் ஆசிரியர்கள் மாணவர்களின் ஒழுக்கத்தை பொறுப்பேற்கப் போவதில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இனி பாடசாலைகளில் ஒழுக்கத்திற்கு பொறுப்பான ஆசிரியர்கள் தேவையில்லை எனவும் ஒழுக்கப் பிரச்சினைகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாா்த்துக்கொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பாடசாலை கட்டமைப்பினை சீா்குலைக்கும் வகையில் சட்டங்களை உருவாக்கும் முட்டாள்தனமான அரசாங்கமே தற்பொழுது ஆட்சியில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.



