விஜயின் பரப்புரையில் பறிபோன உயிர்கள்.. அதிகரித்துள்ள பலி எண்ணிக்கை
கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழக பரப்புரை கூட்டத்தில் நெரிசலில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
நேற்றைய தினம், தவெக கட்சியின் தலைவர் விஜயின் பரப்புரை கூட்டத்தில் கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது.
உயிரிழந்தவர்களின் விபரங்கள்
அத்துடன், பலர் காயமடைந்திருந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்து பலி எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
குறித்த சம்பவத்தில் 10 குழந்தைகள், 16 பெண்கள் உட்பட 40 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், உயிரிழந்தவர்களின் விபரங்களையும் இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
இந்தியா முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கரூருக்கு நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



