அமைச்சர் வசந்த சமரசிங்க தொடர்பான கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்
தேசிய தொழிலாளர் நிறுவனத்திற்குச் சொந்தமான தெஹிவளையில் உள்ள கட்டடமொன்றை மோசடியாகக் குத்தகைக்கு விட்டதாகக் கூறப்படும் வழக்கில், அமைச்சர் வசந்த சமரசிங்க, பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க மற்றும் கடுவலை நகரசபை தலைவர் ரஞ்சன் ஜயலால் ஆகியோரை கைது செய்யுமாறு முறைப்பாட்டாளரின் சட்டத்தரணி விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
கோரிக்கை நிகராகரிப்பு
இது தொடர்பான வழக்கு நேற்று முன் தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது கோரிக்கையை கல்கிசை நீதிவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

நீதிவான் பசன் அமரசேகர தீர்ப்பளிக்கையில், போலி குத்தகை ஒப்பந்தத்தைப் பயன்படுத்தி இரண்டு மாடி கட்டடம் 3 மில்லியன் ரூபாய்க்கு வாடகைக்கு விடப்பட்டதாகப் முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தாலும், இதுவரை சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்கள் குற்றத்தை நிரூபிக்கப் போதுமானதாக இல்லை என்று குறிப்பிட்டார்.
வழக்கு கோப்பு ஏற்கனவே பெப்ரவரி மாதம் சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
வழங்கப்பட்ட வாக்குமூலம்
குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் முன்னர் ஆகஸ்ட் மாதம் நீதிமன்ற உத்தரவுகளுக்கு இணங்க கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவில் வாக்குமூலம் அளித்திருந்தனர்.

அதில் குத்தகை ஒப்பந்தம் 2020ஆம் ஆண்டில் தேசிய தொழிலாளர் காங்கிரஸின் நிர்வாகக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டது என்று அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறியுள்ளார்.
இந்த வழக்கு 2026ஆம் ஆண்டு பெப்ரவரி 27 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam
நடிகர் அபிநய் உடன் 4 நாட்கள் ஒரே வீட்டில் இருந்த நடிகை.. தினமும் குடிப்பது பற்றி அவர் சொன்ன காரணம் Cineulagam