பொலிஸார் தொடர்பில் கெஹல்பத்தர பத்மே வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
பிரபல பாதாள உலகக் குழு தலைவர் கெஹல்பத்தர பத்மே, இலங்கை பொலிஸ் திணைக்கள அதிகாரிகள் தொடர்பிலான சில அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கெஹல்பத்தர பத்மே, கமாண்டோ சலிந்து, பெக்கோ சமன் உள்ளிட்ட பிரபல பாதாள உலகக்குழு உறுப்பினர்களை கைது செய்வதற்கு இலங்கை மற்றும் இந்தோனேசிய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
கெஹல்பத்தர பத்மேவிற்கு இந்த நடவடிக்கை தொடர்பில் முன்கூட்டியே தெரியப்படுத்தப்பட்டிருந்தது எனவும் பொலிஸ் உத்தியோகத்தர்களே இது குறித்து கூறியதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும் சர்வதேச பொலிஸாரினால் பிறப்பிக்கப்பட்ட சிகப்பு எச்சரிக்கை அறிக்கை தொடர்பிலும் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்தது என தெரிவிக்கப்படுகின்றது.
இன்டர்போல் பொலிஸாருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கெஹல்பத்தர பத்மேவின் புகைப்படத்தையும் சில பொலிஸ் அதிகாரிகள் பத்மேவிற்கு அனுப்பி வைத்துள்ளதாக விசாரணைகளில் தெரியந்துள்ளது.
இலங்க பொலிஸ் குழுவொன்று இந்தோனேசியா சென்றுள்ளமை தொடர்பில் கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் பத்மே உள்ளிட்டவர்கள் வேறும் இடத்திற்கு தப்பிச் சென்றுள்ளனர்.
ரீமேக் செய்யப்படும் விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல்.. அதில் யார் ஹீரோவாக நடிக்கிறார் தெரியுமா? Cineulagam
உலகின் மிகப்பெரிய போர் கப்பலைக் களமிறக்கிய ட்ரம்ப்... எதிர்க்கத் தயாராகும் ஒரு குட்டி நாடு News Lankasri
குணசேகரன் சதித்திட்டம், சக்தியிடம் ஜனனி சொன்ன வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது நாளைய ப்ரோமோ Cineulagam
10 ஆண்டுகள் கழித்து சொந்த ராசியில் நுழையும் ராகு! பணத்தை மூட்டைகளில் அள்ளப்போகும் 3 ராசிகள் Manithan