பாதுகாப்பு ஏற்பாடுகள் வழங்கப்படவில்லையா...! உதயநிதி கூறும் விடயம்
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முன்னரே அறிவுறுத்தப்பட்டிருந்ததாக தமிழகத்தின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கரூர் பிரசாரத்தில் காயமடைந்தோரை வைத்தியசாலைக்கு சென்று சந்தித்துவிட்டு ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விமர்சனத்தை முன்வைத்த எதிர்கட்சித் தலைவரும் இரண்டு தினங்களுக்கு முன்னர் அதே இடத்தில் பிரசாரத்தை மேற்கொண்டிருந்தார்.
எவ்வளவு கூட்டம் வரும் என சொல்லப்பட்டது, எவ்வளவு கூட்டம் வந்தது, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் ஒவ்வொரு கூட்டமும் எவ்வளவு தாமதமாக நடத்தப்பட்டது போன்ற ஒவ்வொரு விடயங்களும் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தன.
இந்த இடத்தில் நான் அரசியல் பேச விரும்பவில்லை. இது தொடர்பில் ஆராய கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில்,
மக்களை சந்திப்பது தலைவர்களின் உரிமை, அதேநேரம் கட்டுப்படுத்துவதும் அவர்களுடைய பொறுப்பு - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் #udhayanithistalin #Stamped #TVK #Vijay #Karur #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/L9fICgcmBy
— News18 Tamil Nadu (@News18TamilNadu) September 28, 2025
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



