டீசல் இருப்பை விடுவிக்காவிட்டால் ஏற்றுமதித் தடை விதிக்கப்படும்: ட்ரம்ப் எச்சரிக்கை
உலகளவில் எரிபொருள் விலையைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கையாக அவசரகால டீசல் இருப்பை சந்தைக்கு விடுவிக்குமாறும், தவறினால் அமெரிக்காவிலிருந்து டீசல் ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்கப்படும் என்றும் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
எதிர்வரும் இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக அமெரிக்காவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் டீசல் ஏற்றுமதித் தடையை விதிப்பது தொடர்பில் பரிசீலனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே ஐரோப்பிய நாடுகள் மீதான அழுத்தத்தை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது.
எரிபொருள் விலை குறைப்பு நடவடிக்கை
எரிபொருள் விலையைக் குறைக்கும் முயற்சியாக அவசரகால எண்ணெய் இருப்பை சந்தைக்கு விடுவிப்பதாக முன்னர் அளித்த வாக்குறுதிகளை பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் முழுமையாக நிறைவேற்றவில்லை என அமெரிக்க அதிகாரிகள் அதிருப்தி வெளியிட்டிருந்தனர்.

அடுத்த ஆறு மாத காலத்திற்குள் 120 மில்லியன் பீப்பாய் டீசலை சந்தைக்கு விடுவிக்குமாறு அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியத்திடம் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மத்திய கிழக்கு மற்றும் சீனாவிலிருந்து வரும் டீசல் விநியோகத்தில் தடங்கல்கள் ஏற்பட்டுள்ள நிலையில், ஐரோப்பாவிடமிருந்து புதிய விநியோகம் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என அமெரிக்க வலுசக்தி செயலாளர் கிறிஸ் ரைட் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ரஷ்யாவுடனான மோதல் காரணமாக ரஷ்ய எரிபொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை மற்றும் மத்திய கிழக்கில் ஏற்பட்ட விநியோகக் சீர்குலைவு ஆகியவற்றைத் தொடர்ந்து, ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் எரிபொருள் விநியோகத்தில் பெருமளவில் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
YOU MAY LIKE THIS VIDEO..
வரவேற்கிறோம்... பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையும் திட்டத்துக்கு மேக்ரான் வரவேற்பு News Lankasri
ரியல் எஸ்டேட் விளம்பரத்தில் நடிக்க நடிகர் அஜித்திற்கு கொடுக்கப்பட்ட சம்பளம்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam