திரையிடலுக்கு முன்பே களைகட்டும் போராட்டம் திரைப்படம்! வவுனியாவில் சிறப்புத் திரையிடல்
இலங்கைத் தமிழ் சினிமாவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘போராட்டம்’ திரைப்படத்தின் சிறப்புத் திரையிடல் வவுனியாவில் நேற்றையதினம்(30) சிறப்பாக நடைபெற்றது.
ராஜ் சிவராஜ் எழுதி இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் றீகன் கந்தையா கதாநாயகனாகவும், நிவேதிகா ராசையா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.
போராட்டம்
பூவன் மதீசன் இசையமைத்துள்ள நிலையில், திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி உலகளாவிய ரீதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
கால்பந்தாட்டத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ‘போராட்டம்’ திரைப்படம், இளைஞர்களின் கனவுகள், குடும்ப உறவுகள், காதல், நட்பு மற்றும் வாழ்க்கையில் அவர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களை கதைக்களமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் இடம்பெற்ற சிறப்புத் திரையிடலில் திரைப்படத்தின் கதாநாயகி நிவேதிகா ராசையா உள்ளிட்ட படக்குழுவினரும் கலந்துகொண்டதுடன், ரசிகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் அவர்களுடன் இணைந்து புகைப்படங்களை எடுத்துக்கொண்டு தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
சிறப்புத் திரையிடல்கள்
திரைப்படத்தை பார்வையிடுவதற்காக திரையரங்கிற்கு வருகை தந்த ரசிகர்கள், படக்குழுவினரை நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துக்களையும் பகிர்ந்துகொண்டனர்.

ஏற்கனவே ‘போராட்டம்’ திரைப்படத்தின் சிறப்புத் திரையிடல் கிளிநொச்சி மற்றும் கொழும்பு இடம்பெற்றிருந்த நிலையில், அங்கு திரைப்படத்தை பார்வையிட்ட பொதுமக்கள் திரைப்படத்தின் கதைக்களம் தொடர்பில் தமது பாராட்டுக்களை தெரிவித்திருந்தனர்.
திரையரங்கு வெளியீட்டுக்கு முன்னரே இலங்கையின் பல பகுதிகளில் சிறப்புத் திரையிடல்கள் நடைபெற்று வரும் நிலையில், ‘போராட்டம்’ திரைப்படம் தொடர்பான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றது.
வரவேற்கிறோம்... பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையும் திட்டத்துக்கு மேக்ரான் வரவேற்பு News Lankasri