திரையரங்கில் அதிரடி காட்டிய போராட்டம் திரைப்படம்! கொழும்பில் பிரம்மாண்ட சிறப்பு திரையிடல்
தொழிலதிபர் பாஸ்கரன் கந்தையா வழங்கும் ‘போராட்டம்’ திரைப்படத்தின் சிறப்பு திரையிடல் நேற்று (29) கொழும்பு PVR Cinemas திரையரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது.
திரைப்படத்தை பாஸ்கரன் கந்தையா வழங்கியுள்ளதுடன், IBC Tamil Productions மற்றும் BlackBoard ஆகிய நிறுவனங்கள் தயாரிப்பு மற்றும் வெளியீட்டுப் பணிகளை முன்னெடுத்துள்ளன.
போராட்டம்’ திரைப்படம்
ராஜ் சிவராஜ் எழுதி இயக்கியுள்ள ‘போராட்டம்’ திரைப்படத்திற்கு பூவன் மதீசன் இசையமைத்துள்ளார். ரீகன் கந்தையா மற்றும் நிவேதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தநிலையில் திரைப்படத்தின் சிறப்பு திரையிடல் இலங்கையிலும் சர்வதேச ரீதியிலும் இடம் பெற்றுவருகின்றது. அந்தவகையில் நேற்றையதின்(29) கொழும்பு போராட்டம்’ திரைப்படத்தின் சிறப்பு திரையிடல் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரபல அறிவிப்பாளர் அப்துல் ஹமீத், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜா உள்ளிட்ட ஊடகவியலாளர்கள், பொதுமக்கள், சமூக செயற்பாட்டாளர்கள், இலங்கைத் திரையுலகப் பிரபலங்கள் மற்றும் திரைத்துறையைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டனர்.
கால்பந்தாட்டத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படம், ஒரு இளைஞனின் கனவு, குடும்பப் பின்னணி, காதல், நட்பு மற்றும் வாழ்க்கையில் அவர் எதிர்கொள்ளும் பல்வேறு போராட்டங்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.
சிறப்பு திரையிடலில் (VIP Premiere Show) கலந்துகொண்ட திரைத்துறை மற்றும் சமூகத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள், திரைப்படக் குழுவினருக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், திரைப்படம் தொடர்பான தங்களது கருத்துக்களையும் பகிர்ந்துகொண்டனர்.
மேலும், திரைப்படத்தை பார்வையிட்ட பிரபலங்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள், ‘போராட்டம்’ தொடர்பான தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதன் மூலம் திரையரங்க வெளியீட்டுக்கு முன்னரே திரைப்படம் தொடர்பில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பலரது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘போராட்டம்’ திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி உலகளாவிய ரீதியில் பல திரையரங்குகளில் உத்தியோகபூர்வமாக வெளியாகவுள்ளது.
முழுமையான காணொளிக்கு இங்கே அழுத்தவும்...





உக்ரைனுக்கு இன்னொரு பேரிடி... புடினுடன் இரகசிய ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்த ட்ரம்ப் News Lankasri