மிரிஸ்ஸ கடற்கரையில் நீராடச் சென்ற வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு நேர்ந்த விபரீதம்
இலங்கையின் மிரிஸ்ஸ கடற்கரையில்(Mirissa Beach) நீரில் மூழ்கும் அபாயத்தை எதிர்கொண்ட இரண்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இலங்கை கடலோரக் காவல்படை உயிர்காப்புப் பிரிவினர் பத்திரமாக மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று(14.11.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருவர் மீட்பு
காலை சுமார் 7.45 மணியளவில் இடம்பெற்ற இந்த மீட்பு நடவடிக்கையின்போது, கடற்கரையில் பணியில் இருந்த உயிர்காப்புப் பிரிவினர் துரிதமாகச் செயல்பட்டு இருவரையும் காப்பாற்றியுள்ளனர்.

மீட்கப்பட்டவர்கள் 25 வயதுடைய எகிப்திய நாட்டவரான ரமடான் மற்றும் 31 வயதுடைய பெருவிய நாட்டவரான ஃப்ளோர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இருவரும் எந்தவித காயங்களுமின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
Bigg Boss 10: இதை உங்க வீட்டுல வைச்சிக்கோங்க... என்னிட்ட வைச்சிக்காதீங்க! விளாசிய விஜய் சேதுபதி Manithan
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையும் விவகாரம்: வெளிப்படையாக எதிர்ப்பு துவங்கியது News Lankasri