லண்டனில் பலரை ஏமாற்றிய நிதி மோசடியில் ஈடுபட்ட இலங்கை தமிழ் தம்பதிக்கு சிறைத்தண்டனை
பிரித்தானியாவில் பலரிடம் பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்த இலங்கை தமிழ் குடும்பத்திற்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
புஷே பகுதியில் வசித்து வந்த இந்தத் தம்பதியினர், தீவிர மோசடி மற்றும் சைபர் குற்றப்பிரிவு நடத்திய விசாரணையை அடுத்து கைது செய்யப்பட்டு, செயிண்ட் அல்பான்ஸ் கிரவுன் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த வாரம் இடம்பெற்ற நிலையில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
6 ஆண்டுகள் சிறைத்தண்டனை
52 வயதான மகேந்திர சர்வேந்திரா என்பவருக்கு 6 ஆண்டுகள் 6 மாதங்கள் சிறைத்தண்டனையும், அவரது 51 வயது மனைவி மிர்னாளினிக்கு 3 ஆண்டுகள் இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

ஹெர்ட்போர்ட்ஷயர் பகுதியில் தமிழர்கள் உட்பட பலரிடம் 230,000 பவுண்டுகள் பணமோசடி செய்தமை தொடர்பில் இலங்கை தம்பதி குற்றவாளிகளாக உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டில் அயலவர்களிடம் வீடுகளுக்கான மீள் அடமானத்தை ஏற்பாடு செய்து தருவது, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் முதலீடு செய்து போன்ற ஆசைவார்த்தைகளை கூறி, பெருந்தொகை பணத்தை பெற்றுள்ளனர்.
எனினும் இவ்வாறு பெற்றுக்கொண்ட பணத்தை கொண்டு குறித்த இலங்கை தம்பதி ஆடம்பர வாழ்க்கையில் ஈடுபட்டமை தெரிய வந்துள்ளது.
தற்போது இவர்களின் கணக்குகள் மற்றும் சொத்துக்களில் இருந்து பணத்தை மீளப் பெற 'குற்றவியல் வருமான மீட்பு குழு நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியாவிலிருந்து வெளியேற வாக்கெடுப்பு நடத்திய கிராமம்: ஏமாற்றத்தை அளித்துள்ள தகவல் News Lankasri