60 மில்லியன் பணத்தை திருப்பி அனுப்பிய யாழ். மாவட்டம் - NPP கையில் சிக்கிய அரசியல்வாதிகளின் கோப்புகள்
யாழ். மாவட்டத்தில் உள்ள பிரச்சினைகளுக்கு அநுர அரசாங்கம் முடிந்தளவு தீர்வுகளை வழங்கிக் கொண்டுதான் இருக்கின்றது. ஆனால், சில அரசியல்வாதிகள் தங்களின் சுயலாபத்திற்காக அரசாங்கத்தை குறை கூறுகின்றனர் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் விரிவுரையாளரும், தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் இணைச் செயற்பாட்டாளருமான சுந்தரமூர்த்தி கபிலன் (Kabilan Suntharamoorthy) குற்றம் சாட்டியுள்ளார்.
லங்காசிறி ஊடகம் வழங்கும் “ஊடறுப்பு” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
யாழ். மாவட்ட அபிவிருத்தி
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ். மாவட்டத்தில் உள்ள கால்வாய் சுத்திகரிப்பு, காணிப் பிரச்சினைகள், மக்களின் கோரிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு அநுர அரசாங்கம் தீர்வுகளை வழங்கியுள்ளது.
மாநகரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் புனரமைப்பு நடவடிக்கைகளுக்காகவும் அநுர அரசு நிதி வழங்கியுள்ளதுடன், அதற்கான வேலைத்திட்டங்களும் இடம்பெற்று வருகின்றன. ஆனால், இன்னும் யாழில் உள்ள சில அரசியல் தலைவர்கள் தங்களின் அரசியலை நடத்துவதற்காக அநுர அரசாங்கத்தை குறை கூறிக் கொண்டிருக்கின்றனர்.

மாறாக, அநுர ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கான வேலைத்திட்டங்கள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
அதேபோன்று, கடந்த கால அரசியல் தலையீடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அசுர வேகத்தில் வளர்ந்து வரும் நாடுகளில் இலங்கைக்கும் ஒரு இடம் கிடைத்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும் என்றார்.
ஹார்முஸ் முடக்கம்... லொறிகளில் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை முன்னெடுக்கும் மத்திய கிழக்கு நாடு News Lankasri