அமைச்சர் சந்திரசேகரன் கலந்துகொண்ட போட்டியில் வெடித்த மோதல்! துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸார்
கிளிநொச்சியில் நடைபெற்ற உதைபந்தாட்ட இறுதிப் போட்டியின்போது இரு அணிகளின் ரசிகர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலைக் கட்டுப்படுத்த பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
கிளிநொச்சி - பூநகரி கிராஞ்சி செந்தாரகை விளையாட்டுக்கழக மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(27) நடைபெற்ற உதைபந்தாட்ட இறுதிப் போட்டியொன்று நடைபெற்றுள்ளது.
குழப்பநிலை
குறித்த இறுதிப் போட்டியில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டிருந்தார்.
போட்டியின்போது இரு அணிகளின் ரசிகர்களுக்கு இடையே ஏற்பட்ட குழப்பநிலை பெரிய கலவரமாக மாறியுள்ளது.

இதனையடுத்து சம்பவத்தின் போது வான் நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், மோதல் தீவிரமடைந்த நேரத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் சம்பவ இடத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேறியதாக போட்டியை பார்வையிட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
YOU MAY LIKE THIS VIDEO..
வரவேற்கிறோம்... பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையும் திட்டத்துக்கு மேக்ரான் வரவேற்பு News Lankasri