உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்த டொனால்ட் ட்ரம்ப்
உலகத்தின் 500 பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முதல் முறையாக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இடம் பிடித்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பல்வேறு நிறுவனங்களை நடத்தி வரும் ட்ரம்ப் , புளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி முதல் முறையாக உலக பணக்காரர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மொத்த சொத்து மதிப்பு
அவரது நிறுவனங்களின் பங்கு 185 சதவீதம் விலை அதிகரித்ததால் சொத்து மதிப்பில் 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் உயர்ந்துள்ளது.

இதன்படி அவரது மொத்த சொத்து மதிப்பு 6.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அவர் வருகிற நவம்பர் மாதம் நடைபெற உள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |