இலங்கைக்கு வந்து கொண்டிருந்த கப்பலால் நேர்ந்த பாரிய அனர்த்தம்! அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம்
அமெரிக்காவில் தற்சமயம் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கப்பல் மோதி பாலம் உடைந்து விபத்துக்குள்ளானதில் அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கப்பல் மோதி பிரான்சிஸ் ஸ்காட் பாலம் உடைந்த நிலையில், ஆற்றில் விழுந்தவர்களை மீட்பதற்காகவும், இந்த விபத்து குறித்து விசாரிப்பதற்காகவும் உடனடியாக அவசர நிலை (எமர்ஜென்சி) பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை நோக்கி வந்த கப்பல்
அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தில் உள்ள பல்டிமோர் நகரத்தில் பிரான்சிஸ் ஸ்காட் என்ற பிரம்மாண்டமான இந்த பாலம் அமைக்கப்பட்டிருந்தது.
இந்த பாலம் இரண்டு முக்கிய நகரங்களை இணைக்கும் மிகப் பெரிய பாலம் என்றும், அந்த பாலத்தில் எப்போதுமே வாகனங்கள் சென்று கொண்டே இருக்கும் என்றும் கூறப்படுகுின்றது.
இந்தநிலையில், அமெரிக்காவில் இருந்து இலங்கை நோக்கி புறப்பட்டு வந்த பெரிய கப்பல் ஒன்று குறித்த பாலத்தின் மீது மோதுண்ட நிலையில், பாலம் அப்படியே சரிந்து ஆற்றில் விழுந்துள்ளது.
இந்த கப்பல் கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுவதுடன், அதில் இருந்த மாலுமிகள் உள்பட அனைத்து பணியாளர்களும் இந்தியர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





The Fantastic Four: First Steps மூன்று நாட்களில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam

சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri
