அரச ஊழியர்களுக்கு மேலும் அதிகரிக்கப்படும் சம்பளம் : வாக்குறுதியை நிறைவேற்றும் அரசாங்கம்
தற்போது அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக 10,000 கோடி ரூபா வருடாந்தம் செலவிடப்படுகிறது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் மேலும் 5000 ரூபா அதிகரிக்கப்படுவதோடு 1300 - 1400 கோடி ரூபா நிதியை மேலதிகமாக செலவிட நேரும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
வாக்குறுதியை நிறைவேற்றும்
இது குறித்து பத்திரிகை ஒன்றின் கேள்விக்கு பதிலளித்த நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,
அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்படும் 10,000 ரூபா கொடுப்பனவில் 5000 ரூபா கடந்த ஜனவரி மாதம் முதல் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனையடுத்து மீதமான 5000 ரூபாவை ஏப்ரல் மாதத்தில் வழங்குவதற்கு அரச ஊழியர்களுக்கு அரசாங்கம் வழங்கியுள்ள வாக்குறுதியை நிறைவேற்றும்.
தற்போது அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக 10,000 கோடி ரூபா வருடாந்தம் செலவிடப்படுகிறது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் மேலும் 5000 ரூபா அதிகரிக்கப்படுவதோடு 1300 - 1400 கோடி ரூபா நிதியை மேலதிகமாக செலவிட நேரும் என்று தெரிவித்தார்.
அதேபோன்று ஓய்வூதியகாரர்களுக்கு வழங்கப்படும் வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழிவுசெய்யப்பட்ட அதிகரித்த 2500 ரூபாவை ஏப்ரல் மாதம் முதல் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri

தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
