யாழில் 2000 ரூபாய்க்காக துரத்திய பொலிஸார்.. அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூட்டில் வெளியான பகீர் தகவல்
கடந்த 10ஆம் திகதி அதிகாலை 1.18 மணியளவில் யாழ். மண்டைதீவு பகுதியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 17 வயது சிறுவன் உயிரிழந்தமை பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தமது மகனுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக உயிரிழந்த சிறுவனின் தாயார் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸார், தெரிவிக்கும் கருத்துக்களில் உண்மை தன்மை இல்லை எனவும் பாதிக்கப்பட்ட இளைஞர்களிடம் அவர்களால் பணம் கோரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கிடையில், சிறுவனின் தாயார் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் தனது மகனின் இழப்புக்கு நீதி பெற்றுத் தருமாறும் கோரியுள்ளார்.
சட்டவிரோதமான முறையில் குறித்த மூவரும் செயற்பட்டதாகவும், வாகனத்தை நிறுத்தாமல் சென்றதாலுமே பொலிஸார் இவ்வாறு துப்பாக்கிச் சூட்டை நிகழ்த்தியதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.
இவ்வாறான இரு வேறு தகவல்களுக்கு மத்தியில், உயிரிழந்த சிறுவனின் தாயார் வெளியிட்டுள்ள விடயம் தற்போது பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது.
இவ்விடயம் குறித்து விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,