கடும் பனியால் சிரமம் பிரித்தானிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை
பிரித்தானியாவில் பல பகுதிகளுக்கு பனிப்பொழிவு மற்றும் உறைபனி குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பனிப்பொழிவு மற்றும் உறைபனி குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகள், அதிக கவனமுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நேற்று முதல் நாளை வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை வேல்ஸ் மற்றும் பிரித்தானியாவின் பல பகுதிகளில் இந்த உறைபனி எச்சரிக்கை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பனிப்பொழிவு எச்சரிக்கை
இன்று மட்டும் வடக்கு பிரித்தானியா மற்றும் ஸ்கொட்லாந்து பகுதிகளில் இரவு 9 மணி முதல் கடும் பனிப்பொழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடுமையான குளிரை கருத்தில் கொண்டு முதியவர்கள் மற்றும் நீண்ட நாள் உடல்நலக் குறைபாடு கொண்டுள்ள மக்கள் கூடுதல் கவனமுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பனிப்பொழிவு காரணமாக சாலைகள் வழுக்க கூடும் மற்றும் பார்வைத்திறன் குறைபாடு ஆகிய ஆபத்துகள் ஏற்படும் எனவே உள்ளூர் சாலை நிலவரங்களை சரிபார்த்துவிட்டு வெளியே பயணங்களை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எஞ்சிய ஆறு வெடிகுண்டுகள்... ஈரான் போருக்கு நடுவே ட்ரம்பிற்கு பறந்த அந்த அதிர்ச்சி தகவல் News Lankasri
எதிர்நீச்சல் பார்வதி நடித்து வந்த சூப்பர்ஹிட் தொடர் முடிவுக்கு வந்தது... கடைசி நாள் வீடியோ இதோ Cineulagam