முதன்முறையாக மனம் திறந்த சிறீதரன் எம்பி.. கட்சியில் இருந்து விலக்க பின்னணியில் சதி!
இலங்கை தமிழரசுக் கட்சியில் இருந்து, யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் விரைவில் நீக்கப்படலாம் என்னும் கருத்து சமீப காலமாக முன்வைக்கப்பட்டு வருகின்றது.
அண்மையில், அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தலைமை பதவியில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து இவ்வாறான கருத்துக்கள் வலம் வருகின்றன.
இந்நிலையில், லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த சிவஞானம் சிறீதரன், தன்னை பழிவாங்கும் நோக்கிலும் கட்சியில் இருந்து விலக்கும் நோக்கிலும் பலர் செயற்படுவதாக குறிப்பிட்டார்.
அதேநேரம், "கடந்த இரண்டு வருடங்களாக எனக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்காக செலவிட்ட பணத்தை, தமிழ்த்தேசிய விடுதலைக்காக தமிழ் இளைஞர்களுக்கும் முற்போக்காளர்களுக்கும் செலவழித்து இருந்தால், இந்நேரம் ஒரு மிகப்பெரிய தேசிய எழுச்சி ஏற்பட்டிருக்கும்.
தொடர்ச்சியாகவே, எனக்கு மனோ ரீதியாக அழுத்தங்களை கொடுத்தார்கள். நானாகவே இந்த கட்சியை விட்டு போக வேண்டும் என்ற அழுத்தங்களை பிரயோகித்திருந்தார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் பல தகவல்களை வழங்கியுள்ளார்..
பிரித்தானியாவில் திருமணம்... குடும்பம் ஒன்று விமான நிலையம் செல்லும் வழியில் கோர சம்பவம் News Lankasri
பிரித்தானியாவை நெருக்கும் ஆறாவது வெப்ப அலை... 14 லட்சம் மக்களுக்கு குழாய் நீர் பயன்பாட்டுத் தடை News Lankasri
நைட்டி விவகாரத்தில் என்னை டி.ஆர்.பிக்காக பயன்படுத்திவிட்டார்கள் : பிரிய வர்ஷினி பரபரப்பு பேச்சு! Manithan