புதிய நாடாளுமன்ற செனட்டரை அறிவித்த ட்ரூடோ
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒன்றாரியோவிற்கான புதிய செனட்டரை நியமித்துள்ளதாக அறிவித்துள்ளார்.
புதிய செனட்டராக கார்ப்பரேட் நிர்வாகம், சர்வதேச வணிகம் மற்றும் பல்வேறு தொழில்நுட்பத் தொழில்களில் நிபுணத்துவம் பெற்ற தொழிலதிபர் முகமது அல் ஜை பக் நியமிக்கப்பட்டுள்ளார்.
சமூகத் தலைவர்
புதிய நியமனம் குறித்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், “ஒன்றாரியோவிற்கான செனட்டில் காலியாக உள்ள ஒரு செனட்டரை நிரப்புவதற்கு, சுதந்திரமான செனட்டராக முகமது அல் ஜைபக்கை நியமித்ததாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
முகமது அல் ஜைபக் the Royal Ontario Museum மற்றும் the Canadian Chamber of Commerce போன்ற நிறுவனங்களை ஆதரிக்கும் பாத்திரங்களுடன், அவர் ஒரு பெருமைமிக்க சமூகத் தலைவராக இருந்து வருகிறார்.
சிரிய அகதிகள் கனடாவில் மீள்குடியேற உதவும் மனிதாபிமான அமைப்பான Lifeline சிரியாவையும் அவர் இணைந்து நிறுவினார் என”கூறப்பட்டுள்ளது.
பன்முகத்தன்மை
இதுகுறித்து ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட பதிவில், நாடாளுமன்றத்தின் புதிய சுயாதீன செனட்டராக முகமது அல் ஜைபக் நியமிக்கப்பட்டதை நான் வரவேற்கிறேன்.
அவரது வணிக மற்றும் பரோகார அனுபவம், பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கத்தில் அவரது சமூகத் தலைமையுடன் சேர்ந்து, செனட்டை சிறப்பாக மாற்றும்.
நடுத்தர வர்க்கத்தை வளர்க்கவும், அனைவருக்கும் வலுவான எதிர்காலத்தை உருவாக்கவும் அவருடனும் அனைத்து செனட்டர்களுடனும் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்' என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |