ஆளில்லா விமான தாக்குதலில் 3 அமெரிக்க இராணுவ வீரர்கள் பலி
ஜோர்டான் நாட்டிலுள்ள முகாம்களில் அமெரிக்க இராணுவ வீரர்கள் தங்கியிருந்தபோது, திடீரென நடத்தப்பட்ட ஆளில்லா விமான தாக்குதலில் 3 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், குறித்த தாக்குதலில் 25 பேர் காயமடைந்து உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரான் ஆதரவு
இந்நிலையில் சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுக்கள் இந்த தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

காசாவுக்கு எதிரான இஸ்ரேலின் போர் தொடங்கியதில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளில் எதிரி படைகளால் அமெரிக்க வீரர்கள் கொல்லப்படும் முதல் சம்பவமாக இது பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri