பிரேத பரிசோதனைக்காக எடுத்துச்செல்லப்பட்ட பாதி தகனம் செய்யப்பட்ட உடல்
வெயங்கொட பகுதியில் தகனம் செய்யப்பட்ட சடலமொன்று திடீரென வெளியில் எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வத்துப்பிட்டிவல வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெயங்கொட பகுதியைச் சேர்ந்த 81 வயது பெண் மீரிகமவில் உள்ள முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த நிலையில் நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து அவரது உடலை தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மரணத்தில் சந்தேகம்
இதன்போது உயிரிழந்த பெண்ணின் உறவினர் ஒருவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கம்பஹா பிரிவின் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து விசாரணைகளை ஆரம்பித்த மீரிகம பொலிஸார் திடீர் மரண விசாரணை அதிகாரியுடன் தகன அறைக்கு சென்று தகனம் செய்யப்பட்ட சடலத்தை அகற்றி பிரேத பரிசோதனைக்காக வத்துப்பிட்டிவல வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதற்கமைய, மேலதிக விசாரணைகளை மீரிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam
