நீக்கப்பட்ட ஆயிரக்கணக்கான விளம்பரங்கள்...! யூடியூப் நிறுவனம் எடுத்துள்ள நடவடிக்கை
யூடியூப் (You Tube) தளத்தில் இருந்து 1000க்கும் அதிகமான போலி விளம்பரங்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தகவலை கூகுள் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் யூடியூப் அறிவித்துள்ளது.
பெருகிவரும் முறைகேடுகளே இது போன்ற போலி விளம்பரங்கள் முக்கியமான காரணமாகவுள்ளதாக யூடியூப் தெரிவித்துள்ளது.
போலி விளம்பரங்கள்
இந்நிலையில், யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்ட பிரபல ஹாலிவுட் நட்சத்திரங்களான டைலர் ஸ்விஃட்,ஜோ ரோகன், ஸ்டீவ் ஹார்வி ஆகியோர் இடம்பெறும் போலி விளம்பரங்கள் 200 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.
அந்த விளம்பரங்கள் அனைத்தும் டீப் ஃபேக் செய்யறிவு தொழில்நுட்பத்தால் தயாரிக்கப்பட்ட போலி விளம்பரங்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, இதுபோன்ற முறைகேடான போலி விளம்பரங்களை இனம் கண்டறிந்து நீக்கும் பணியை தீவிரமாக செய்து வருவதாக யூடியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |