டி20 உலகக் கோப்பை 2026! நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி

England Cricket Team New Zealand Cricket Team T20 World Cup 2026 T20 Cricket
By Shadhu Shanker Feb 27, 2026 11:33 PM GMT
Report

டி20 உலகக் கோப்பை குரூப் 8 சுற்றில், நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிப்பெற்றுள்ளது.

டி20 உலகக் கோப்பை குரூப் 8 சுற்றில், இன்று(27) கொழும்பில் நடைபெற்று வரும் போட்டியில் குரூப் 2ல் இடம் பிடித்துள்ள இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் மோதியது.

நியூசிலாந்து அணி 

இந்த போட்டியில் வெற்றி பெற்றால் அரையிறுதி வாய்ப்பை உறுதிப்படுத்தி விடலாம் என்ற முனைப்போடு நியூசிலாந்து களம் இறங்கியது. இங்கிலாந்து ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது.

நாணயசுழற்சியில் வென்ற நியூசிலாந்து துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணியின் டிம் செய்பெர்ட், ஃபின் ஆலன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் முதலில் நிதானமாக விளையாடினர்.

டி20 உலகக் கோப்பை 2026! நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி | England Vs New Zealand

அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். செய்ஃபெர்ட் 25 பந்தில் 35 ஓட்டங்களும், பின் ஆலன் 19 பந்தில் 29 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த ரச்சின் ரவீந்திரா 11 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் விக்கெட்டுகள் விழுந்த நிலையில், கிளென் பிளிப்ஸ் தாக்குப்பிடித்து 28 பந்தில் 39 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார்.

டேரில் மிட்செல் 3 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அடைந்தார்.

நியூசிலாந்து 17.1 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 135 ஓட்டங்கள் எடுத்திருந்தது. 18-வது ஓவரை ஜேக்ஸ் (7 ஓட்டங்கள்), 19ஆவது ஓவரை அதில் ரஷித் (5 ஓட்டங்கள்) அபாரமாக வீசினர்.

டி20 உலகக் கோப்பை 2026! நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி | England Vs New Zealand

கடைசி ஓவரை ரேஹன் அகமது வீசினார். இந்த ஓவரில் நியூசிலாந்து 12 ஓட்டங்கள் அடிக்க 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்து அணி சார்பில் 7 வீரர்கள் பந்து வீசினர். இதில் அதில் ரஷித், வில் ஜேக்ஸ், ரேஹன் அகமது தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இங்கிலாந்து அணி

இதையடுத்து, 160 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது.

டாம் பாண்டன் 33 ஓட்டங்களும், ஹாரி புரூக் 26 ரன்னும் எடுத்தனர். கடைசி 3 ஓவரில் வெற்றிபெற 43 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

டி20 உலகக் கோப்பை 2026! நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி | England Vs New Zealand

ரெஹான் அகமது அதிரடியாக ஆடி சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார்.

இங்கிலாந்து 19.3 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 161 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

வில் ஜாக்ஸ் 32 ஓட்டங்களும், அகமது 7 பந்தில் 19 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

நியூசிலாந்து சார்பில் ரச்சின் ரவீந்திரா 3 விக்கெட் வீழ்த்தினார்.

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US