இன்றைய வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்! பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (4) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்தின் சில இடங்களிலும் 75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆபத்துக்களை குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக வீசக்கூடும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என்பதால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
நடுவீதியில் மர்மமாக உயிரிழந்துகிடந்த இளம் மருத்துவ பீட மாணவி - கணவர் வெளியிட்ட அதிர்ச்சி வாக்குமூலம்