கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள இளம் பெண் - சந்தேகநபர் தலைமறைவு
புத்தளம் - சாலியவெவ, கும்புகல்ல பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் குடும்ப தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (03) பெறப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் சாலியவெவ பொலிஸார் இந்த மரணம் குறித்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் கும்புகல்ல பகுதியை சேர்ந்த 32 வயதுடைய பெண் என தெரிவிக்கப்படுகின்றது.
பிரேத பரிசோதனை
தற்போதைய விசாரணையின் படி, குடும்பத்தகராறு காரணமாக குறித்த நபர் கொலையை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலும், சந்தேகநபர் தற்போது அப்பகுதியிலிருந்து தப்பிச்சென்றுவிட்டதாகவும் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் நீதிபதியின் விசாரணைக்கு பிறகு, பிரேத பரிசோதனைக்காக புத்தளம் மருத்துவமனை பிரேத கிடங்கில் உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை சாலியவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.